இந்தியன் 2' வெளிவருமா? என்பது எனக்கு தெரியாது? அதிர்ச்சி அளித்த கமல்

Last Modified ஞாயிறு, 28 ஜனவரி 2018 (22:01 IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் இன்று ஷங்கர், தாய்லாந்தில் இந்தியன் 2' புரமோஷனில் கலந்து கொண்டு இதுகுறித்த பலூன் ஒன்றையும் பறக்கவிட்டார்

இந்த நிலையில் தாம்பரம் தனியார் கல்லூரி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ''அன்பே சிவம்' , 'தசாவதாரம்', 'வறுமையின் நிறம் சிவப்பு' ஆகிய படங்களை இன்றைக்கு என்னால் எடுக்கமுடியாது
எடுத்தால், என் மேல் வழக்கு போடுவார்கள். 'இந்தியன் 2' படம்கூட வெளிவர விடமாட்டார்கள் என நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

'பத்மாவத்' படத்திற்கு தேவையில்லாமல் போராட்டம் செய்வது போல் தன்னுடைய 'இந்தியன் 2' படத்திற்கு பிரச்சனை செய்வார்கள் என்ற அர்த்தத்தில் கமல் கூறியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :