செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:49 IST)

'செருப்படி கொடுத்தேன்' பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்த கஸ்தூரி!

நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ இயக்கம் மூலம் வெளிப்படுத்தி வருவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம்  எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நடிகை கஸ்தூரி, பெண்களுக்கு எதிரான பல பிரச்னைகளில் பல  அதிரடியாக கருத்துக்களை கூறிவருகிறார்,
 
அந்த வகையில், ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் "உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை. தயக்கமா?" என்று கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, "தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர். இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு  ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.