1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:47 IST)

விருந்தோம்பலை மறந்தேன் வையாபுரி; ட்வீட் செய்த நடிகை ஸ்ரீபிரியா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து அந்த நிகழ்ச்சி குறித்து பல பிரபலங்கள் தினமும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் கூறி வந்தனர்.

 
இந்நிலையில் குறிப்பாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா ஆரம்பம் முதலே ஓவியாவுக்கு தீவிர ஆதரவு அளித்து வந்ததோடு, தொடர்ந்து  நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் மூலம் பதிவிட்டு வருகிறார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை கடந்து மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் வையாபுரி  எப்போதும் கணேஷ் அதிகம் சாப்பிடுகிறார் என்று குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கணேஷின் உணவு பழக்கம் பற்றி வையாபுரியை தவிர வேறு யாரும் புகார் கூறுவது  இல்லை. கணேஷை விட வையாபுரி தான் உணவை பற்றி அதிகம் யோசிக்கிறார்.
 
வையாபுரி எப்ப பார்த்தாலும் கணேஷ் சாப்பிடுவதை பற்றி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை! விருந்தோம்பலை மறந்தேன்  வையாபுரி என்று ட்வீட் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.