வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:33 IST)

விஜயகாந்துக்குப் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’… ரஜினிக்குப் பிடிக்காத வார்த்தை என்னனு தெரியுமா?

தனக்குப் பிடிக்காத சில சொற்களில், ‘வேலைநிறுத்தம்’ என்பதும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.



 
ஃபெப்சி தொழிலாளர்களை மட்டுமே படப்பிடிப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி, யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஃபெப்சி, நேற்று முதல் வேலை செய்யவில்லை. இதனால், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதில், ரஜினியின் ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’ ஆகிய படங்களும் அடக்கம். அதேநேரம், விஷாலின் ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்புகள் எந்தத் தடையுமின்றி நடைபெற்றன.

இந்த விவகாரம் நீண்டுகொண்டே செல்ல, பஞ்சாயத்து பண்ணச்சொல்லி ரஜினியை இன்று சந்தித்தார் ஆர்.கே.செல்வமணி. சந்திப்புக்குப் பின், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி. “எனக்குப் பிடிக்காத சில சொற்களில் ‘வேலை நிறுத்தம்’ என்கிறது ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல், பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி, கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று, மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.