Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

”நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?” - டாப்ஸி அதிரடி பேட்டி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (14:17 IST)
நான் மிகவும் தைரியம் நிறைந்த பெண். எனக்குத் தன்னம்பிக்கை நிரம்ப உண்டு. எதற்கும் பயப்பட மாட்டேன் என்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகை டாப்சி கூறியுள்ளார்.

 

இது குறித்து கூறியுள்ள டாப்ஸி, “நான் மிகவும் தைரியம் நிறைந்த பெண். எனக்குத் தன்னம்பிக்கை நிரம்ப உண்டு. எதற்கும் பயப்பட மாட்டேன். நான் மாடலிங் செய்ய விரும்பி அதில் ஈடுபட்டபோது என் தந்தை தூக்கமின்றித் தவித்தார்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, தவறாகப் பேசுவார்களோ என்றெல்லாம் பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி, அவரது நண்பர்கள் பாராட்டியபோதுதான் நிம்மதியானார். சுற்றியிருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள்.

நானும் அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன். விரும்பிய வேலையை, தொழிலை ஆண்களைப் போலவே பெண்களும் செய்ய அனுமதிக்க வேண்டும். சினிமாவுக்கு வந்தபிறகு நண்பர்கள், வெளிப் பழக்க வழக்கங்களால்தான் நான் உலகத்தையே கண்டு உணர்ந்தேன்.

இப்போது எனது பெற்றோர்கள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள். பெண்களுக்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் அவசியமில்லை என்பதையும் நம்புகிறார்கள். கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்கக்கூடாது.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பதை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சிவரும். அதுபோலத்தான் எனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதிலும் எனக்கொரு எண்ணமிருக்கிறது. என் மனதிற்குப் பிடித்தவரை எப்போது சந்திக்கிறேனோ அப்போதுதான் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :