திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2020 (15:59 IST)

கொரோனா எப்படி பரவுகிறது என்று பாருங்க... நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ!

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவது எப்படி? துரிதமான வீடியோ தொகுப்பு!

கொரோனா இந்தியாவில் இப்போது மிகவும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் அபாயக் கிட்டத்தட்ட எட்டிவிடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களை வீடுகளுக்குள்ளாகவே தனிமைபடுத்த பிரபலங்கள் பல விழிப்புணர்வு பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று பாருங்கள் என கூறி நடிகர் ஸ்ரீமன் வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஜப்பான் விஞ்ஞானிகள் மிகவும் சக்திவாய்ந்த கேமராவில் துரிதமாக ஒருவரிடமிருந்து  மற்றொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை வீடியோவுடன் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர். இந்த வீடியோவை வெளியிட்டு  நிலைமையை புரிந்துகொண்டு  தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். கொரோனா போரில் நாங்கள் வென்றோம் என்று சொல்லி அனைவரும் ஒன்றுபட்டு வெளியே வருவோம். என நடிகர் ஸ்ரீமன் அறிவுரை வழங்கியுள்ளார்.