1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (12:08 IST)

மீண்டும் இணையும் ஹவ் ஓல்ட் ஆர் யூ ஜோ‌டி

36 வயதினிலேயாக தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படம், ஹவ் ஓல்ட் ஆர் யூ. 


 

 
மலையாளப் படமான இதில் மஞ்சு வாரியர், குஞ்சாகா போபன் கணவன், மனைவியாக நடித்திருந்தனர். அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
 
தமிழில், சென்னையில் ஒருநாள் என்ற படம் வெளியானது அல்லவா? அதன் ஒரிஜினலான, மலையாளப் படம் ட்ராபிக்கை இயக்கியவர், ராஜேஷ் பிள்ளை. அவர் அடுத்து, வேட்டா என்ற படத்தை இயக்குகிறார்.
 
இந்தப் படத்தில் குஞ்சாகா போபனும், மஞ்சு வாரியரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜேஷ் பிள்ளையின் முதல் சொந்தத் தயாரிப்பு இந்தப் படம். பாமா, விஜயராகவன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.