1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (17:11 IST)

நயன் தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் புரோகிதர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

Vignesh Sivan Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர்  கடந்த 9 ஆம் தேதி  தன் நீண்ட நாள் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார்.  இவர்களின் திருமணத்தை வீடியோ பதிவு செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்ததாக தகவல் வெளியானது.

சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடந்த இத்திருமணத்தில் முக்கிய வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் ஜோடியான நயன்தரா – விக்னேஷ் சிவன் தற்போது ஹனிமூனுக்கான பேங்காக் சென்றுள்ள நிலையில், இத்திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. புரோகிதர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.