ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (11:22 IST)

ஹவுஸ்மேட்ஸ் பேசிய தரம்கெட்ட வார்த்தைகள்! – ஒரிஜினல் முகங்களை கிழித்து காட்டிய பிக்பாஸ்!

Boggboss
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் அளித்துள்ள டாஸ்க் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரின் ஏழாவது சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக பிரதீப் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதீப் எலிமினேஷன் செய்யப்பட்டது சரி கிடையாது என்று பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோ தொடர்ந்து கூறி வருகின்றனர். துபோல வீட்டிற்கு வெளியே ஆடியன்ஸ் இடையேயும் இந்த எலிமினேஷன் நியாயமற்றது என்ற கருத்து நிலவி வருகிறது.

இதற்கிடையே டீமாக சேர்ந்து கொண்ட மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூ ஆகியோ பலரையும் பல்வேறு விதங்களில் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்சும் பிறரை தேசிய தரம் கெட்ட வார்த்தைகளில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு அதற்கு அவர்கள் அங்கேயே விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதில் நிக்சன் எலிமினேஷன் செய்யப்பட்ட வினுஷா குறித்தும், அவரது உடலமைப்பு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல ஜோவிகா, தினேஷை பற்றி கேவலமாக அடித்த கமெண்டுகளும் இடம் பெற்றுள்ளது. இதனால் ஹவுஸ்மேட்ஸ் இடையே பெரும் சண்டை மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.