”அந்த காதல் தான் என்னையும் அஜித்தையும் இணைத்தது”…ஹாலிவுட் நடிகை நெகிழ்ச்சி

Last Updated: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:16 IST)
அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், சிறப்பு வேடத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை, அஜித்தையும் அவரையும் சந்திக்கவைத்த காதலை பற்றி கூறியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம், பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

படத்தின் ட்ரைலர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் கடந்த மாதம் வெளியான நிலையில், இரண்டாவது பாடலான “காலம்” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலில் ஹாலிவுட் நடிகையும் இந்திய பெண்ணுமான கல்கி கொய்ச்சலின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் பல ஹிந்தி திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார்.

சமீபத்தில் நேற்கொண்ட பார்வை திரைப்படத்தின் பாடலில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட கல்கி கொய்ச்சலின், தென்னிந்திய சினிமாவில் தனக்கு வாய்ப்பு அளித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
மேலும் அவர், நடிகர் அஜித் ஒரு நல்ல பண்பாளர் என்றும், படப்பிடிப்பில் அவரே வந்து தனக்கு ”ஹாய்” சொன்னதாகவும் கூறினார்.

நடிகர் அஜித்திற்கு நாய்கள் என்றால் பிரியமாம், அதே போல் தனக்கு நாய்கள் மேல் மிகவும் பிரியம் என்றும், இந்த காதல் எங்களை இணைத்தது என்றும் கல்கி கொய்ச்சலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  இதில் மேலும் படிக்கவும் :