Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தல அஜித்தை பாராட்டிய ஹாலிவுட் நடிகை


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (15:58 IST)
விவேகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் அஜித்தை எளிமையான நடிகர் என பாராட்டியுள்ளார்.

 

 
அஜித் நடிப்பில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விவேகம். அஜித் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விவேகம் படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனைவரும் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் விவேகம் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக் என்பவரும் பாராட்டியுள்ளார். இவர் இந்த திரைப்ப்ரம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கூறியவதாவது:-
 
அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார். 
 
ஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தலாக செய்தார். அவரது எளிமையைக் கண்டு வியந்தேன். 
 
சினிமாவுக்காக அவர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து ஆச்சர்யம் கொண்டேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :