1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:43 IST)

விஜய்யை வைத்து இயக்கவுள்ள அவரது மகன் சஞ்சய் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு  வெளியாகிப் பெரும் வெற்றிப் பெற்ற படம் மாஸ்டர். இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை அடுத்து,நடிகர் விஜய் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய்64 படத்தில் நடிக்கவுள்ளதாக கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் விஜய்65 வது படத்தை அவரது மகன் சஞ்சய் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் விஜய் கனடா நாட்டில் சினிமா சம்பந்தமான ஒரு படிப்பு படித்துவருகிறார். அவரை விரையில் சினிமாவில் அறிமுகமப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இப்போது, விஜய் தனது படத்தில் சஞ்சயை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

விஜயின் மகன் சஞ்சய் ஏற்கனவே குறும்படம் இயக்கி வரவேற்பைப் பெற்றது. போக்கிரி படத்தில் ஒரு பாடலில் அவர் நடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.