திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam (Murugan)
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (12:40 IST)

உயிருடன் இருப்பவர் வேடத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்

கணிதவியல் வல்லுநரான பீகாரைச் சேர்ந்த ஆனந்த் குமார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.


 

 
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் கணிதவியல் வல்லுநர் ஆனந்த் குமார். ஐஐடியில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், ‘சூப்பர் 30’ என்ற புரோகிராமை உருவாக்கியவர். இந்த புரோகிராமுக்காக, அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா முதற்கொண்டு பலரிடமும் பாராட்டு பெற்றவர். 44 வயதேயான இவருடைய வாழ்க்கை வரலாறு, படமாக எடுக்கப்பட இருக்கிறது.


 

 
தன்னுடைய ‘காபில்’ படத்துக்குப் பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த ஹிருத்திக் ரோஷன், ஆனந்த் குமார் வேடத்தில் நடிக்கப் போகிறார். விகாஸ் பால் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூலை மாதம் தொடங்குகிறது. கல்லூரி மாணவர் மற்றும் பேராசியர் என இரண்டு தோற்றங்களில் நடிக்கப் போகிறார் ஹிருத்திக். கல்லூரி மாணவர் வேடத்துக்காக தற்போது எடையைக் குறைத்துவரும் ஹிருத்திக், ஐஐடி பேராசிரியர் வேடத்துக்காக எடை கூடுகிறார்.