3வது முறையாக இணையும் சுந்தர் சி - ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி!

Last Updated: புதன், 27 பிப்ரவரி 2019 (22:07 IST)
சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதே கூட்டணியில் உருவாகியுள்ள 'நட்பே துணை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சுந்தர் சி - ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்திற்கு 'முரட்டு சிங்கிள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷங்கர் உதவியாளர் ராணா என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க மூன்று பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல ஹீரோ சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :