Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்து மதம் உங்க சொத்து இல்லை; கமலுக்கு ஆதரவாக ட்வீட்டிய நடிகை கஸ்தூரி!

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (18:11 IST)

Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. இந்திய பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
 
 
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மற்றும் போட்டியாளர்களையும் கைது செய்ய வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கைதாவது பற்றி எனக்கு கவலையில்லை என கமல் தெரிவித்துள்ள நிலையில், நடிகை கஸ்தூரி கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதை அவர்கள் விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என கூறியுள்ள அவர், "பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏற்கனவே 100 நாள் வீட்டு காவலில் தான் உள்ளனர், அவர்களை ஏன் கைது செய்யவேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 
"முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தணும். இந்து மதம் ஒண்ணும் உங்க தனிப்பட்ட சொத்து இல்லை, வேலி போட்டு காக்க," என கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்வீட் ஸ்டால் நடிகையால் எரிச்சலாகும் சரும நடிகை

ஸ்வீட் ஸ்டால் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், சருமப் பிரச்னை நடிகைக்கு ...

news

“காதல் மன்னனும், 5 ஹீரோயின்களும்” – அதர்வா ஹேப்பி

‘காதல் மன்னன்’ பெயரை படத்துக்கு வைத்துவிட்டு, 5 ஹீரோயின்களுடன் நடிக்காவிட்டால் எப்படி? ...

news

இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் 3 வடிவேலு?

இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ...

news

போட்டியில்லாமல் வளரும் ஒல்லி நடிகர்

ஒல்லி நடிகர், எந்தப் போட்டியுமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Widgets Magazine Widgets Magazine