வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (11:25 IST)

ஹிந்தி ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள ‘ஹிந்தி மீடியம்’ தமிழ் ரீமேக்கில், ஹீரோயினாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
 
‘ஹிந்தி மீடியம்’ என்ற பாலிவுட் படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். கடந்த மே மாதம்  ரிலீஸான இந்தப் படத்தில், இர்ஃபான் கான் ஹீரோவாக நடித்திருந்தார். 23 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 109  கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதன் தமிழ் ரீமேக்குக்கான ஸ்கிரிப்ட்டை எழுதிவரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அசோக்  செல்வனை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா மற்றும் மஞ்சிமா மோகனிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஓகே ஆகியுள்ளார். தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வட சென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.