1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (18:23 IST)

'கைதி’ ரீமேக்கில் நாயகி, ஐட்டம் சாங்.. சொதப்பும் பாலிவுட் குழுவினர்..!

kaithi
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அதன் திரைக்கதை மற்றும் நாயகியே இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் ஆகியவையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வரும் நிலையில் கார்த்தி வேடத்தில் நடித்து வரும் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார. அதுமட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு ஐட்டம் சாங் இருப்பதாகவும் அந்த பாடலுக்கு ராய் லட்சுமி நடனமாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட ஒரு படத்தை ஐட்டம் சாங் மற்றும் நாயகி என சொதப்பி வருவதாக பாலிவுட் திரை உலவினர்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
ஒரிஜினலின் தன்மை மாறாமல் அப்படியே ரீமேக் செய்தாலே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விடும் என்றும் ஆனால் பாலிவுட் திரையுலகினர் தேவை இல்லாத காட்சிகளை இணைத்து படத்தை சொதப்பி வருகிறார்கள் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 
 
அஜய் தேவ்கான் அமலா பால் உள்பட பலரது நடிப்பில் உருவான 'கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
Edited by Siva