ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (20:38 IST)

’’சூரரைப் போற்று’’ படம் எப்படி இருக்கு..? முதல் விமர்சனம் இதோ...இந்திய அளவில் #SooraraiPottruOnPrime டிரெண்டிங்

மெரினா, பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர் அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.இவர் சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு விமர்சித்துள்ளார். அத்துடன் நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்திய அளவில் #SooraraiPottruOnPrime என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. சூர்யா  தனது ரசிகர்களுக்கு எனவே இப்படத்தை பிரைம் ஷோவில் திரையிடவுள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில் நாளைதான் இப்படம் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி என்றாலும் இன்று நள்ளிரவு முதலே அமேசான் பிரைமில் இப்படம் பார்க்கலாம்.

இந்நிலையில் இயக்குநர்பாண்டிராஜ் சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், சூரரைப் போற்று புதிய அனுபவமாக இருந்தது. படத்திலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஆன்மாவைத் தொடுவதாக இருந்தது. சூர்யா சார் நடிப்பு அற்புதமாக இருந்தது.

 சுதா மேம், உங்களது கடின உழைப்பை ஒவ்வொரு காட்சியிலும் பார்த்தேன்…. ஜிவி இசையும் அற்புதமாக உள்ளது. இப்படம் தீபவாளிக்கு காட்சி விருந்தாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.