செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (14:32 IST)

#வரிகட்டுங்க_விஜய் - சமூக வலைத்தளத்தில் துவங்கிய கேலி!

வலைத்தளமான டிவிட்டரில் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக் விஜய்க்கு எதிராக டிரெண்டாகி வருகிறது. 

 
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு என தெரிவித்ததோடு நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.  
 
இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் இது குறித்து கேலி செய்து வருகின்றனர்.