வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 25 பிப்ரவரி 2023 (15:08 IST)

'துருவ நட்சத்திரம்' பட புதிய அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்

Dhuruva Natchathiram
துருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  படம் துருவ நட்சத்திரம். இப் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ள நிலையில், இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில், இப்படத்தில் விக்ரம் மீண்டும் தே நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லபபட்ட நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு “ஜான் வில் மீட் யு சூன்” என்று அறிவித்தனர்.

ஏற்கனவே, இப்படத்தில் ஒருமனம் என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், கெளதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது, டால்பி9.1.4 எனவும் விரைவில் திரையரங்கில் இதை கேட்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.