வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:14 IST)

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாய் குதித்து அனைவரையும் ஓட விட்ட ஹரிஷ் கல்யாண்!!

பிக்பாஸ் வீட்டில் தற்போது அதிரடியாக புது வரவுகள் சிலர் வந்துள்ளனர். அதில் நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ்  வீட்டில் நுழைந்தார்.

 
வீட்டிலில் நுழைந்தவுடன் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் என்று கூறி, எனக்கு பெண்கள் சமைத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. உடனே காயத்ரி-பிந்து ஒரு அணியாகவும் ரைசா-சுஜா ஒரு அணியாகவும் செயல்பட்டு ஹரிஷுக்கு உணவு தயார் செய்தனர்.
 
உடனே ஹரிஷுக்கு சப்பாத்தி சமைத்து கொடுத்தனர், சாப்பிட்டு முடித்து பிறகுதான் இது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் இல்லை,  நான் உங்களை ஏமாற்றினான் என்று கூறினார். இதை அறிந்த ரைசா அதிர்ச்சியடைந்ததோடு, கடுப்பானார். மேலும் நாளைக்கு ஹரிஷை சும்மா விட கூடாது என்று வீட்டில் உள்ள மற்றவர்களிடம் ரைசா தெரிவித்ததோடு, ஹரிஷ் கல்யாண் சிக்கலில் சிக்க  வைக்க புது பிளான் போட்டு வருகிறார்.