1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (13:12 IST)

மீண்டும் இணையும் சூர்யா - ஹரி கூட்டணி! நெகிழ வைக்கும் கதை...

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணி என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு தற்போது வருவது சூர்யா- ஹரி கூட்டணி. அட்டகாசமான ஆக்ஷன் திரைக் கதையை விறுவிறுப்பாக நகர்த்திக் கொண்டு செல்வதில் ஹரி எப்போதுமே வெற்றியாளர்தான்.


ஹரியின் ஆக்ஷன் கதையை திரையில் அற்புதமாக நடித்து காட்டி மக்களிடையே சிறந்த ஆக்ஷன் நடிகராக சூர்யா உருவெடுத்துள்ளார். இந்தக் கூட்டணி இதுவரை ஐந்து படங்களை தந்துள்ளது. 
 
ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 படங்களில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது சாமி-2 வைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கபோகிறார் சூர்யா.
 
சமீபத்தில் ஹரி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார். சென்ட்டிமென்ட் கலந்த அதிரடி கதையில் படம் உருவாகிறது. வேல் படத்தை விட கூடுதல் சென்ட்டிமென்ட் இருக்கும் என தெரிவித்துள்ளார்.