வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 18 மே 2022 (18:48 IST)

நடிகர் பசுபதியின் பிறந்த நாள் ..குவியும் வாழ்த்துகள்...

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் பசுபதி. இவர் விக்ரம் நடித்த தூள் படத்திலும்   விஜய்யின் திருப்பாச்சி படத்திலும்  வில்லனாக  நடித்து அசத்தினார்.

அதன்பின், வெயில், விருமாண்டி,மஜா, குசேலன்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய  நடிகர் பசுபதி, கடந்தாண்டு வெளியான சர்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்து அசத்தினார்.

இந்நிலையில், இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்ககள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.