வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:42 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசை - பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!

கொரோனா வைரஸால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலுக்கு செல்ல முடியவில்லை என்று நடிகை ஹன்சிகா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் எனத் தமிழின் முன்னணி நடிகர்களொடு ஜோடி போட்ட ஹன்சிகா இப்போது கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளார். தற்போது ’மகா’ என்ற படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இப்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் அவர் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தின் கீழ் ‘கொரோனா காரணமாக கடலுக்கு செல்லவில்லை. மனம் அதே நினைப்பாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதலாக கமெண்ட் செய்துகொண்டு வருகின்றனர்.