ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:20 IST)

சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா! இதை பார்த்த உங்களுக்கே புரியும்

கஞ்சா சாமியார்  வேடத்தில்  ஹன்சிகா இருக்கும் போஸ்டர்  சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


 
ஹன்சிகா துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். மஹா படத்தில் அவரது முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ருத்ராட்ச மாலையும், காவி உடையும் அணிந்து ஹன்சிகா கஞ்சா அடித்தபடி இருக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹன்சிகா தோற்றத்தை பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் சர்ச்சை தோற்றம் குறித்து படத்தின் இயக்குனர் ஜமீல் கூறும்போது, “ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றத்தை விமர்சிப்பது சரியல்ல. ஹன்சிகாவின் தோற்றத்தை ஒரு படத்தின் கதாபாத்திரமாக மட்டுமே பார்க்க வேண்டும். படத்தில் ஒருவர் மது அருந்துகிறார் என்றால் குடிகாரன் என்ற கதாபாத்திரத்துக்காக அதை செய்கிறார்கள். இதுவரை பார்க்காத ஹன்சிகாவை இந்த படத்தில் பார்க்கலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகிறது. ஸ்ரீகாந்தும் இதில் நடிக்கிறார்” என்றார்.