1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (11:32 IST)

ஹன்சிகா என்னை ஏமாற்றினார் - நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

ஹன்சிகா என்னை ஏமாற்றினார் - நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

ஹன்சிகா ஏமாற்றியதால் பல லட்சங்கள் நஷ்டம் என்றும், அதனை அவர் தரவேண்டும் என்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் புகார் தந்துள்ளார்.


 
 
பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் ஜீவா, சிபி, ஹன்சிகா நடித்த படம், போக்கிரிராஜா. படம் வெளியாகி அட்டர் ப்ளாப்பானது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள ஹன்சிகா வருவதாக வாக்கு தந்திருந்தார். தயாரிப்பாளரும் நட்சத்திர ஹேட்டலில் அறை போட்டு, விமான டிக்கெட் எடுத்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஹன்சிகா எஸ்கேப்.
 
ஹன்சிகா வராததால் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை அவர் தர வேண்டும் என்றும் செல்வகுமார் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தார். அதற்கு எந்த பலனும் இல்லாததால் வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.