1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (22:21 IST)

விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் 2 இயக்குனர்கள்

இளையதளபதி விஜய்யின் 62வது படத்தை இயக்கவுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பையே தொடங்கவில்லை. அதற்குள் விஜய்யின் 63வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கிவிட்டன.

சமீபத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இயக்குனர் எச்.வினோத், சமீபத்தில் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த படத்திற்காக வினோத் செய்த ஹோம்வொர்க்கை பாராட்டிய விஜய், அவரிடம் ஒரு கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

அதேபோல் 'வேலைக்காரன்' இயக்குனர் மோகன்ராஜாவை சந்தித்த விஜய் அவரிடம் 'வேலாயுதம் 2' படத்தின் கதையை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, விஜய்யின் 63வது படத்தை இயக்கவுள்ளது இந்த இருவரில் ஒருவர் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். விஜய்யின் 63வது படத்தை இயக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் அட்லி ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.