புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2017 (11:45 IST)

நாங்க உதவினாலும் இந்த படம் ஓடாது; ஹெச்.ராஜாவின் நக்கல் ட்வீட்

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் திரைப்படம், நாங்கள் உதவினாலும் ஓடாதாம் என ஹெச்.ராஜா கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.


 

 
கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் இப்படை வெல்லும். இந்த படம் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடுவது பற்றி பேசியுள்ளார்.
 
அதாவது மெர்சல் படத்திற்கு தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா பேசியது போன்று தன் படத்திற்கு பேசினால் நன்றாக இருக்கும் என்பது போஒன்று பேசியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக மீம்ஸ் வந்தது. 
 
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஒடாதாம் என ட்வீட் செய்துள்ளார். உதயநிதியை கேலி செய்துள்ளார். இதற்கு பலரும் பதில் ட்வீட் செய்துள்ளனர்.
 
ஒருவர், அப்போ மெர்சலுக்கு உதவினத ஒத்துக்குறீங்க என ட்வீட் செய்துள்ளார். மற்றோருவர் கருப்பன் குசும்புக்காரன்.. அடுத்த படத்த புரோமசன் பன்ன பாக்குறான்.. என ட்வீட் செய்துள்ளார்.
 
உதயநிதி ரசிகர்கள், உதயநிதி சாதித்து விட்டதாக கூறி வருகின்றனர். ஹெச்.ராஜாவை பேச வைத்தது மூலம் உதயநிதி இலவச விளம்பரம் தேடி வெற்றிப் பெற்றுவிட்டார் என கூறி வருகின்றனர்.