வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (18:47 IST)

உண்மை காதலை போற்றும் படம் ‘திரெளபதி’. எச்.ராஜா பாராட்டு

ஜி மோகன் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று இந்த படம் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு எச்.ராஜா, அர்ஜுன் சம்பத் உள்பட பலர் வருகை தந்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்தபின் ஹெச் ராஜா அவர்கள் கூறியதாவது: ‘திரெளபதி’படம் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு அதிலும் பெற்றோர்கள் தன் வயதுக்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் 
 
ஏனென்றால் எத்தனை பெண் குழந்தைகள் ஏமாற்றப்படுகிறார்கள் நாடகக் காதலால் என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். பெண் குழந்தைகளை மடியிலும் தோளிலும் போட்டு பெற்றோர்கள் வளர்த்து வரும் நிலையில் அந்த குழந்தைகள் பாலுணர்வு வக்கிரத்தால் ஈர்க்கப்பட்டு சமூக சீர்கேடுகள் நிறைந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில் சிக்குவதால் ஏற்படும் நிகழ்வுகள் கொண்ட ஒரு திரைப்படமாக இந்த ‘திரெளபதி’திரைப்படத்தை பார்க்கிறேன் 
 
ஆகவே அனைத்து சமுதாய மக்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்த திரைப்படம் ட்ரெய்லர் வந்த பிறகு இந்த படம் குறித்து கூறிய புகார்களுக்கு அனைத்தும் அடிப்படை இல்லாதது என்பதை இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு புரிய வருகிறது. இது ஒரு நல்ல திரைப்படம். சமூக சீர்திருத்த கருத்துக்கள் கொண்ட ஒரு படம்’ என்று எச்.ராஜா தெரிவித்தார்.