புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மே 2020 (09:00 IST)

கர்நாடக இசை பிதாமகர் தியாகையரை இழிவு படுத்தியுள்ளார் – கமல் மீது அடுத்த விமர்சனத்தை வைத்த ஹெச் ராஜா!

கர்நாடக இசை ஜாம்பவான் தியாகராஜ ஐயரை கமல் இழிவுப் படுத்தியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதி கமலை நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் செய்தார். அப்போது விஜய் சேதுபதியின் ஒரு கேள்விக்கு கமல் ‘சினிமா டிக்கெட் வாங்கிக் கொண்டு காட்டப்படும் ஒரு வியாபாரம்தானே. தர்மத்துக்கு பாடும் பாட்டு இல்லை. தியாகையர் எப்படி ராமரைப் போற்றி, தஞாவூர் வீதிகளில் பிச்சை எடுத்த்துக்கொண்டு திரிந்தாரோ அப்படி பட்ட கலை இல்லை. எனக்கு கார் வாங்கவேண்டும், எம் ஜி ஆர் சிவாஜி போல ஆகவேண்டும் என ஆசை. அப்போது மக்களை மகிழ்விக்க மாட்டேன் என சொன்னால் என்ன வீம்பு?’ எனப் பதிலளித்தார்.

இந்நிலையில் கமலின் பேச்சு தியாகையரை இழிவு படுத்தியுள்ளதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரீகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசை பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்.’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.