சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (22:09 IST)

ஜி.வி.பிரகாஷ் மீது பாய்ந்த சீமானின் 'கோபம்'

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கையில் ஏற்கனவே அரை டஜனுக்கும் அதிகமாக படங்கள் கைவசம் இருக்கும் நிலையில் அவர் விரைவில் சீமான் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.



 


அரசியல் பணி காரணமாக இயக்குனர் பணிக்கு நீண்ட இடைவெளி விட்ட சீமான், மீண்டும் தற்போது படம் இயக்குவது உறுதியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் சீமான் இணையும் இந்த படத்திற்கு 'கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.