செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (15:57 IST)

கேரளம் மீண்டு வர துணைநிற்போம்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு..!

G. V. Prakash Kumar
கேரள மாநிலம் வயநாடு அருகே மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 170 க்கும் மேற்பட்டோர் உயி இழந்த நிலையில் ஏராளமான நபர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் மற்றும் மீட்பு படையினர் இரவு பகலாக அந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திரை உலக பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வுக்கு தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசன், விஜய் உள்ப சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் கேரளம் மீண்டு வர துணை நிற்போம் என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது

வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்

Edited by Siva