1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (20:13 IST)

ஜிவி பிரகாஷின் அடுத்த படம் ஒரு அடல்ட் காமெடி படமா?

ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ஒரு திரைப்படம், அடல்ட் காமெடி படம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேச்சிலர்.  இந்த படம் ஒரு அடல்ட் காமெடி படம் என்றும் இந்த படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் தான் கிடைக்கும் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறியபோது ’பேச்சிலர்’ ஒரு அடல்ட் காமெடி படம் இல்லை என்றும் ஒரு பேச்சிலரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் படம் என்றும் அடல்ட் காமெடி என்ற பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
 
ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது