திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (14:40 IST)

கௌதமியின் மகளா இது கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்குறாங்களே!

ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.
கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்.. இதோ புகைப்படம்! | Actress Gautami Daughter Latest Photo
 
இவர் ரிக்சா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா ராஜா கைய வச்சா, தேவர் மகன், நம்மவர் உள்ளிட்ட படங்ககளில் நடித்து புகழ் பெற்றார். பெரும்பாலும் கமலுடன் நடித்ததால் என்னவோ அவர் மீது காதல் வயப்பட்ட லிவிங் டூ கெதரில் இருந்து வாழ்ந்து வந்தனர். 
கிளாமர் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கௌதமி மகள்.. இதோ புகைப்படம்! | Actress Gautami Daughter Latest Photo
 
இவர் ஏற்கனவே சந்தீப் பாட்டிய  என்பவரை திருமணம் செய்து பிரிந்துவிட்டார். அவர்களுக்கு சுப்புலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். மகளுடன் கமல் வீட்டில் வாழ்ந்து வந்த கௌதமி மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமல்ஹாசனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மியின் அழகான  போட்டோக்களை ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்தனர். இந்நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் கிளாமர் நடிகைகளையே மிஞ்சும் அழகில் உள்ளதாக நெட்டிசன்ஸ் ஷேர் செய்து வருகின்றனர்.