வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (07:43 IST)

பாராட்டுகளைக் குவித்த குட்னைட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய காதலியை இழப்பது, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என கலகலப்பாக செல்லும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.