புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (18:49 IST)

பிரபல நடிகை சன்னி லியோனுக்கு கோல்டன் விசா

sunny leone
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு உலகம் முழுவதும்  பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த கோல்டன் விசா பெறுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாகக் கருதப்படுவர்.

ஏற்கனவே,  இந்த கோல்டன் விசாவை தமிழ் சினிமாவின்,  கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதிபதி, திரிஷா, ஜோதிகா ஆகியோர்  பெற்றுள்ளனர், அதேபோல், இந்தியில், ஷாருக்கான், சஞ்சய் தத்; மலையாள சினிமாவில், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.