1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (14:40 IST)

தள்ளிப்போகிறது அஜித்தின் விவேகம் வெளியீடு

அஜித்தின் சிக்ஸ்பேக் கெட்டப் விவேகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு  மார்ச் 2ம் தேதி முதல் பல்கேரியாவில் தொடங்குகிறது.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில்  நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கியது  படக்குழு.
 
இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது மார்ச் 2ம் தேதி முதல், மீண்டும் பல்கேரியாவில்  இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளது.
 
இறுதிகட்ட பணிகள் அனைத்தையும் முடித்து, ரம்ஜான் விடுமுறைக்கு வெளியிட முதலில் திட்டமிட்டது படக்குழு. ஆனால்,  படப்பிடிப்பு தாமதமானக் காரணத்தினால், தற்போது சுதந்திர தின விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.