திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:41 IST)

சர்ச்சை காரணமாக இலங்கை செல்லும் முடிவை கைவிடட்தா ‘GOAT’ படக்குழு!

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

படத்தின் பெருபகுதி ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு சென்றால் தேவையில்லாத சர்ச்சைகளை சந்திக்க நேரிடும் என்பதால் இப்போது இலங்கைக்கு செல்லாமல் வேறு எங்காவது ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என GOAT படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.