இயக்குனர் அமீர் மேல் 10 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்த ஞானவேல் ராஜா!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.
இதையடுத்து அமீருக்கு ஆதரவாக பல முன்னணி சினிமா கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவுக் கொடுத்தனர். இதனால் ஞானவேல் ராஜா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் இப்போது இயக்குனர் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரோடு தொடர்பு படுத்தி இயக்குனர் அமீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பான விளக்கம் அளிக்கும் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அமீர் பேசும்போது ஞானவேல் ராஜா மற்றும் அவரின் தந்தை ஈஸ்வரன் ஆகியோர் பற்றிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து ஞானவேல் ராஜா “தன் மீதும் தன் தந்தை மீதும் அவதூறு கருத்தைப் பரப்பியதற்காக 10 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.