செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (09:21 IST)

AGR யாரு தெரியுமா? தெறிக்கவிடும் STR -ன் பத்து தல!!

பத்து தல படத்தின் புதிய சிம்பு போஸ்டரையும், படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் முன்னோட்ட GLIMPSE வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

 
நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ஹிட் அடித்த நிலையில் சிம்பு ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்து வரும் சிம்புவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. ஆம் பத்து தல படத்தின் புதிய சிம்பு போஸ்டரையும், படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் முன்னோட்ட GLIMPSE வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தாதாவாக சிம்பு இந்த படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக தமிழில் 'பத்து தல' உருவாகி உள்ளது. இதோ இந்த வீடியோ...