வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 9 ஜூலை 2016 (17:48 IST)

பேயால் கிடைத்த வெற்றி - மகிழ்ச்சியில் சந்தானம்

பேயால் கிடைத்த வெற்றி - மகிழ்ச்சியில் சந்தானம்

சந்தானம் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. நாயகன் வேடத்துக்கு சந்தானம் சரிப்பட மாட்டார் என்ற எண்ணம் வலுப்பெற்ற நிலையில், கெட்டப்பை மாற்றி ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார்.


 


பேய் கதையான இது ரசிகர்களை குலுங்க சிரிக்க வைக்கிறது. சந்தானத்தின் நடிப்பையும் விமர்சகர்கள் சிலாகிக்கின்றனர். நாயகனுக்கான முதிர்ச்சி இந்தப் படத்தில் சந்தானத்திடம் தெரிகிறது. படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 
 
முக்கியமாக ஜாக்சன் துரையை பல இடங்களில் இந்தப் படம் பீட் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. சந்தானத்தின் ஹீரோ ஆசைக்கு தில்லுக்கு துட்டு படம் சரியான அடித்தளம் அமைத்துள்ளதால் மனிதர் எக்ஸ்ட்ரா சந்தோஷத்தில் இருக்கிறார்.