வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (11:34 IST)

மீண்டும் நடிக்கவரும் ஜெனிலியா

பாய்ஸ் படத்தில் சின்னப் பெண்ணாக அறிமுகமான ஜெனிலியா இப்போது ஒரு சின்னக் குழந்தைக்கு தாய். ஆறு மாதங்களுக்கு முன் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர், நியான்.
நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் திருமணம் ஆவதற்கு முன்புவரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு கணவர் மற்றும் அவரது குடும்பம் அனுமதி அளித்துள்ளது. 
 
இந்திப்பட உலகில் உள்ள தனது நண்பர்களிடம் நல்ல வாய்ப்புக்காக சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு தமிழ், தெலுங்கில் நடிக்க வேண்டாம் என அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.