செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (05:17 IST)

பிரபல நடிகையால் 20 வயது இளைஞனை போல மாறிய 40 வயது கணவர்

விஜய் நடித்த சச்சின், வேலாயுதம் உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்த நடிகை ஜெனிலியா,

இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அவர்களுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரித்தேஷின் 39வது பிறந்த நாள் டிசம்பர் 17ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாளின்போது ஜெனிலியா தனது கணவருக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள Tesla Model X என்ற மாடல் காரை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து ரித்தேஷ் தனது டுவிட்டரில் கூறியபோது, 'என் மனைவி கொடுத்த இந்த பரிசை பார்த்ததும் 40 வயதான நான் 20 வயது இளைஞனை போல மகிழ்ச்சியில் துள்ளினேன்' என்று கூறியுள்ளார்.