’நானே வருவேன்’ தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நடிகரின் நிறுவனம்!
தனுஷ் நடித்த நானே வருவேன் என்ற திரைப்படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
நானே வருவேன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் அவர்களுக்கு சொந்தமான நிறுவனம் என்பதும், ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்திற்கு தெலுங்கு டைட்டிலாக நானே வாஸ்துனானா என்ற வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.