Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னம்மா அங்க ஒரே பீப் சத்தமா இருக்கு: சிம்புவையே மிஞ்சிய காயத்ரி!

என்னம்மா அங்க ஒரே பீப் சத்தமா இருக்கு: சிம்புவையே மிஞ்சிய காயத்ரி!


Caston| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (13:34 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகமாகிறது. அவர் பயன்படுத்தும் வார்த்தைகளே அவருக்கு தவறான பிம்பத்தை ஏற்படுத்தி தருகிறது.

 
 
எச்சைங்க, சேரி பிஹேவியர், மயிரு என்பதை ஆங்கிலத்தில் ஹேர் என கூறி திட்டுவது என தனது வார்த்தை உபயோகத்தால் மக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்துகிறார்.
 
மேலும் கோபப்பட்டு அவர் பேசும் தொனி, ஓவியாவிடம் அடிக்கடி சண்டைக்கு போவது, கார்னர் செய்வது என காயத்ரி ரகுராம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பிக் பாஸ் பார்க்கும் பலரும் வைக்கின்றனர்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ஓவியாவை சகட்டு மேனிக்கு திட்டுகிறார். அதில் பல வார்த்தைகளை நேயர்கள் கேட்க கூடாது என்பதற்காக விஜய் தொலைக்காட்சி அந்த இடத்தில் பீப் ஒலியை பயன்படுத்தியது.
 
நாம் ஒரு பொது வெளியில் இருக்கிறோம். நம்மை சுற்றி இத்தனை கேமராக்கல் இருக்கிறது என்பதையும் அறியாமல் தன்னுடைய சுய ரூபத்தை காயத்ரி வெளிப்படுத்தி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது.
 
இரவு சாப்பிட்டுவிட்டு பிளேட் கழுவும் விவகாரத்தில் தான் அவர் ஓவியாவை திட்டினார். ஒரு பிளேட் கழும் விஷயத்திற்கு கோவம் வந்தால் இத்தனை பீப் போடும் அளவிற்கா திட்டுவது. சிம்புவின் பீப் பாடலில் வரும் பீப்பை விட காயத்ரி திட்டும் போது வரும் பீப் அதிகமாக இருக்கிறதே என சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.
 
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா கூட காயத்ரி ரகுராம் பற்றி கூறும் போது தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் காயத்ரிக்கு தெரிஞ்சிருக்கு என குறிப்பிட்டார். கமல் இந்த வாரமாவது காயத்ரி பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அவரை கண்டிப்பாரா என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :