ஓவியா பற்றி தவறாக பேசிய காயத்ரி: ஒளிபரப்பாமல் மறைத்த பிக் பாஸ்!

ஓவியா பற்றி தவறாக பேசிய காயத்ரி: ஒளிபரப்பாமல் மறைத்த பிக் பாஸ்!


Caston| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (12:29 IST)
பிக் பாஸ் ரசிகர்களில் பெரும் பகுதியை தனது ரசிகர்களாக வைத்திருந்த நடிகை ஓவியா சில தினங்களுக்கு முன்னர் மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னரும் அவர் குறித்தான பேச்சு பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 
 
நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியும், ஷக்தியும் நீச்சல் குளம் அருகே உள்ள ஷோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது காயத்ரி இந்த வாரம் வெளியேற்றும் போது நான் தான் போவேன் என கூறினார். அதற்கு ஷக்தி நீ எல்லாம் போக மாட்ட, வையாபுரி போகலாம் என கூறினார்.
 
அப்போது காயத்ரி இல்ல நாம அந்த கார்னர்ல உட்கார்ந்து பேசுனோம்ல அத போட்டிருப்பாங்க என கூறினார். அது புரியாமல் ஷக்தி நீ எத பத்தி சொல்ற என கேட்கிறார். அதற்கு பதில் அளித்த காயத்ரி நாம இரண்டு பேரும் ஆரவ்கிட்ட பேசிட்டு இருந்தோம்ல பணக்காரனா இருந்தா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாளான்னு கூறினார்.
 
உடனடியாக ஷக்தி அத எல்லாம் நீ ஏன் பேசுற என அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுமாறு கூறுகிறார். இதன் மூலம் இவர்கள் பணம் தொடர்பாக ஓவியா பற்றி தவறாக ஏதோ ஆரவிடம் பேசியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆனால் அந்த பேசிய வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்ப செய்யவில்லை.
 
அதனை ஒளிபரப்பியிருந்தால் நிச்சயம் காயத்ரி பெயர் இன்னமும் அதிகமாக கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் தான் வெளியேற்றப்படுவதற்கு அந்த பேச்சு காரணமாக இருக்கும் என காயத்ரியே கூறுகிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றவர்கள் அதனை ஒளிபரப்பவில்லை. இதனையடுத்து அந்த வீடியோவை குறும்படமாக கமல் வெளியிட வேண்டும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :