வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (16:37 IST)

லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர்!

ஐபிஎல் தொடரில் புதிதாக தொடங்கப்பட உள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள கம்பீர் ‘மீண்டும் கிரிக்கெட்டில் இருப்பது பாக்கியம். வெற்றிக்கான நெருப்பு இன்னும் எனக்குள் பிரகாசமாக இருக்கிறது. ஒரு வெற்றியாளரின் மரபை விட்டுச்செல்லும் ஆசை என்னுள் இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.