வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (14:41 IST)

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம்

கௌதம் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கௌதம் முழுமையாக ஸ்கிரிப்டை முடிக்காததாலும், படத்தின் கதை முழுக்க ஆங்கிலப்பட பாணியில் இருந்ததாலும் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகினார்.

 
அவர் நடிக்க மறுத்த அதே கதையில் தற்போது விக்ரமை வைத்து படத்தை எடுக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். விக்ரம் அடுத்து நடிக்கும் விஜய் சந்தர் படம் முடிந்த பிறகு இந்தப் படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
 
முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.