திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (13:31 IST)

எனக்கென்னமோ கொல்கத்தா ஜெயிக்கும்னு தோணுது! – அவ்ளோதான்.. கம்பீர் சொல்லிட்டார்!

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறலாம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் ப்ளே ஆஃப் போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.

இந்நிலையில் இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே முதல் ப்ளே ஆஃப் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர் “2021ம் ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் கோப்பையை கைப்பற்றுவார்கள் என தோன்றுகிறது. இதுவரை வெல்லாத அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்” என தெரிவித்துள்ளார். பொதுவாக கௌதம் கம்பீர் கருத்துக்கு எதிராகவே எல்லாம் நடக்கும் என்ற ஒரு செண்டிமெண்ட் உள்ளதால் கௌதம் கம்பீரின் இந்த கருத்து வைரலாகியுள்ளது.