செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2024 (09:49 IST)

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

விடுதலை படத்துக்குப் பிறகு சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  

இந்த அமோக வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் குமார், கதாநாயகன் சூரிக்கு 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லியான பிஎம்டபுள்யு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.